உதான் (Udaan)
சென்ற பதிவில் மேற்கோளிட்ட ஒரு நல்ல திரைப்படத்தின் பார்வையே இந்த பதிவு.உதான் ஹிந்தி திரைப்படம் பார்த்தபோது தமிழில் ஏன் இதுபோன்ற முயற்சிகள் வருவது மிகக் குறைவாக இருக்கிறது என்ற ஏக்கம் வருவதை தவிர்க்கமுடியவில்லை.ஹிந்தி படங்கள் என்றாலே ஷாருக்,சல்மான் போன்றோர் கிடார் மீட்டிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சுரங்களிலேயே காதல்கீதங்களை காலத்திற்கும் பாடிக்கிட்டு இருப்பார்கள் என்ற எண்ணங்கள் மாறத் துவங்கி கொஞ்சம் நாட்களாகிவிட்டன.அதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்று வந்துள்ள உதான் (Udaan) கட்டாயம் பார்க்கவேண்டிய நன்மதிப்புப் படங்களின் வரிசையில் மிக முக்கியமான ஒன்று என்பதை அழுத்தமாய் சொல்கிறது.
சிம்லாவில் உள்ள ஒரு தனித்தன்மையான விடுதிப் பாடசாலையில் படிக்கும் பதின்ம வயது நான்கு நண்பர்கள் சுவரேறிக் குதித்துச் சென்று வாலிபப்படத்தைப் பார்க்கப்போய் பிடிபட்டதால் விடுதியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜாம்ஷெட்பூரிலுள்ள தந்தையிடம் வந்துசேரும் ரோஹன் தனது இலக்கியம் கற்கும் விருப்புக்கும் தந்தையின் அதிகப்படியான இராணுவரீதியான கட்டுப்பாடுகளுக்கும் இடையே எதிர்கொள்ளும் எதார்த்த நிகழ்வுகளின் உணர்வுரீதியான,நேர்த்தியான கோர்வையே இந்த உதான். தன்னை சார் என்றழைக்கச் சொல்லும் அளவிற்கு விடுதிப்பாடசாலையை விட அதிக கட்டுப்பாடுகள் கொண்ட தந்தை, எட்டு வருட இடைவெளியில் பிரிந்து சென்றுவிட்ட இரண்டாம்தாரத்தின் மகன் என்னும் புதிய தம்பி உறவு என பாத்திரப்படைப்புகளின் புதுப்பரிமாண அறிமுகம் கதைக்களனூடே பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.
எழுத்தாளராகும் தன்விருப்பிற்கு பெரும் முட்டுக்கட்டை இட்டு தனது இரும்புத் தொழிலகத்தில் மதியம்வரை பகுதிநேர பணிக்கும்,பின் பொறியியல் கல்லூரியில் சென்று பயிலவும் ரோஹனை ஆட்படுத்துகிறார் தந்தை.தினமும் காலையில் கட்டாய மெது ஒட்டப்பயிற்சியும் தொடர்ந்து விரைவு ஓட்டப்பந்தயமுமாய் ரோஹனுக்கு ஆட்டம் காட்டுகிறார் தந்தை.ஒருமுறை நேரத்தில் கிளம்பாததால் பள்ளி செல்லும் ஆறு வயது அர்ஜூனையும்,ரோஹனையும் விட்டுவிட்டு காரை எடுத்துச் சென்றுவிடுகிறார்.போற்றிப்பாடும் இயல்பிற்கு முரணாக தந்தையின் சர்வாதிகாரம் படம்முழுக்க ரோஹனை மட்டுமல்லாமல் நம்மையும் நொறுக்குகிறது. பிடிக்காத பாடங்களுக்கும் அன்பை தவிர்த்த ராணுவத்தனமான கண்டிப்புடன் பேணுகிற தந்தைக்கும் நடுவே பறிபோய் கொண்டிருக்கும் இளவயது சுதந்திரத்தைத் திரும்ப பெற்றிடும் ரோஹனின் முயற்சி தான் முழுபடமும்.ஒரு தாய் அல்லது பெண்மணி இல்லாத குடும்பத்தின் சூழலை,பிள்ளைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்பை நம்பகத்தன்மைக்கு மிக அருகில் நம்மை அழைத்துச்செல்கிறது இந்தப்படம்.
எட்டுவருடமாய் ஒருமுறையும் தன்னை வந்து பார்த்திராத ஆற்றாமையையும்,ஆறு வயதில் ஒரு தனக்கு ஒரு தம்பி இருப்பதை பதினேழாம் வயதில் தெரியவந்ததை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போதும்,தன்னிடம் தோழமையுடன் ஊக்கமளிக்கும் சித்தப்பாவிடம் கூண்டுச்சிறையிலிருந்து விடுவிக்கக் கோரும்போதும் ரோஹனாக நடித்திருக்கும் ராஜத் பர்மெச்சா இயல்பாய் செய்திருக்கிறார்.தனது இலக்கியத்திறனையும்,நண்பர்களையும் நம்பி மூன்றாம்முறை மணம்புரிந்த சர்வாதிகார தந்தையை ஒரு குத்துவிட்டு பின்னர் ஆறுவயது தம்பியுடன் வீட்டைவிட்டு ரோஹன் வெளியேறுவதோடு முடிகின்ற படத்தில் அவர்களின் வாழ்க்கை என்னாகுமோ என்ற நமது பதட்டம் படத்தின் முக்கிய ஜீவன்,வெற்றி.
எடுத்துக் கொண்ட கதையில் செய்நேர்த்தியும், சீரான கதையோட்டமும் அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்ரமாதித்ய மோத்வனெ. அனுராக் கேஷ்யாப்பின் பட்டறையிருந்து வந்துள்ள இவர் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.
குறிப்பாக ரோஹன் ரயிலில் ஜாம்ஷெட்பூர் வந்திறங்கி வீடு சேர்ந்து அடுத்தநாள் காலையில் ஊர்ப்பெயரை காண்பிக்கிறார்.steel city என்பதை பார்வையாளர்கள் முன்னமே இனம் கண்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையாக இருக்கலாம்.ரோஹனின் தந்தை காரில் எப்போதும் ஒரு பாதுகாப்புத் தலைக்கவசம்(safety Helmet - hard hat) வைத்திருப்பார்.ரோஹன் முதல்நாள் தனது தொழிற்சாலையில் வேலைக்கு பயிற்சி எடுக்க மேலாளருடன் அனுப்பும்போதும் ஹெல்மெட்டைக் கொடுத்து வாழ்த்தி அனுப்புவது என சிறுவிஷயங்களிலும் இயக்குநர் நல்ல கவனத்துடன் கையாண்டிருக்கிறார்.இது பாதுகாப்பு சார்ந்த தொழில்முனைப்பில் இருக்கும் என் கண்ணுக்குதான் தென்படுகிறதா என்பது வேறுவிஷயம்.
இலக்கியம் படித்தால் சோறு கிடைக்காது என்பது ரோஹனின் தந்தையின் கருத்து மட்டுமல்ல பெரும்பான்மையான இந்திய பெற்றோரின் கருத்து.இந்த பாதிப்பில்தான் ஏதோவொரு வகையில் இலக்கியத்தின்பால் ஈர்ப்பு கொண்ட ஆனால் வேறுதுறைப்பாடங்களை படித்த பெரும்பான்மையானோர் இணைய வலைப்பதிவர்களாக வலம்வருகிறார்களோ என்று ஏனோ ஐயங்கொள்ளத் தோன்றுகிறது.
3 இடியட் வணிகரீதியான கலவையாக உருப்பெற்றப்படம் என்பது என் கருத்து.அதுபோன்ற ஒரு கோட்பாட்டை இந்தபடம் எந்தவித வணிகரீதியிலான கலப்பின்றி தந்திருக்கிறது.கேன்ஸ் திரைப்பட விழாவிலும்,தோஹா திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்ட பெருமைக்குரியது இந்த படைப்பு.விடலைப் பருவத்தின் காட்சியமைப்புகளை நம்தமிழ் இயக்குநர்கள் கையாளும் விதமே தனி.சோகக்கதை அது. சமீபகால ஹிந்தி சினிமாக்களின் தரத்தைக் காணுகையில் தமிழ் சினிமா பயணம் எதைநோக்கி சென்று கொண்டிருக்கிறது என்கின்ற பயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.மிஷ்கினின் நந்தலாலா பயம்தீர்க்க ஆதரவு தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.2010 ல் வந்த இந்தியப்படங்களில் ஒரு முக்கிய இடத்தைப்பெறும் இப்படத்தை வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.
Saturday, 6 November 2010
Saturday, 30 October 2010
தவறவிட்ட திரைப்பட விழா வாய்ப்பு
சென்னை ஃபில்ம் சேம்பரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச திரைப்பட விழா சமயத்தில் என் வாய்ப்பு பறிபோன கதை வேறுதளத்தைப் பற்றியது.இந்த தளம் இடம் என்ற அர்த்தத்திற்குரியது.சென்னையைப் பிரிந்து இருப்பதால் அங்கு நடைபெறும் விழாவில் கலந்து கொள்வது இயலாமையாகிப் போனது.மறதியும் சோம்பேறித்தனமும் குறுகிய வட்டமுமே இந்த வாய்ப்பைத் தவறவிடக் காரணம்.இந்த கட்டேற்றம் கத்தார் தோஹாவில் இன்றோடு நடந்துமுடிந்த சர்வதேசத் திரைப்பட விழாவைப்(Doha Tribeca Film Festival) பற்றிய மையம் கொண்டது.
இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு நண்பரின் வழக்கமாய் திருப்பிவிடும் சுபாவ இமெயில் மூலம் இதுபற்றி அறிந்தேன்.பிறகு அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் விவரங்கள் தேடியதில் அவர்களுக்கு சேவைப்பணிக்கு விண்ணப்பிக்க ஆட்களும் தேவை என்பது தெரிந்தது.இதிலெல்லாம் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இதுவரை பெரியதாய் இல்லாமல் தான் இருந்தது.ஆனால் சில நண்பர்களின் பரிந்துரைகளினாலும்,சாரு நிவேதிதா,எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் என் மனத்தில் உண்டாக்கிய தாக்கத்தினாலும் சர்வதேசத் திரைப்படங்கள் என்னுள் ஒரு உந்துதலை உண்டாக்கி இருந்தது.
திரையிடப்போகும் படங்களின் பட்டியலை அப்போதைய சமயத்தில் பார்த்தபின் ஒரே அரபியத் திரையிடல்கள் வாசம் என்னை பயமுறுத்தியது.அதனால் விண்ணப்பிக்க தயங்கி பின்வாங்கிவிட்டேன்.விண்ணப்பித்து இருந்தாலும் கிடைத்திருக்குமா என்பது வேறு விஷயம்.விண்ணப்பித்த ஆயிரமவர்களில் ஒரு நூறுபேரை மட்டுமே தேர்வு செய்த்ததும்,அதில் பெரும்பான்மையானவர்கள் அரபிக் பேசுபவர்கள் என்பதும் காலம் கடந்தபின் வந்துசேர்ந்த புரிதல்.அதோடு இந்த விழாவைப் பற்றி மறந்துவிட்டேன்.
இன்றுதான் இவ்விழாவினைப் பற்றிய தொடர்விவரங்கள் கிடைக்க,வாய்ப்பு தவறவிட்டதன் உணர்வு உறுத்தியது.கென்ஸ் விழாவில் கலந்து கொண்ட பல சர்வதேசத் திரைப்படங்களும் கடைசிநேர வரிசையில் சேர்ந்து கொண்டன.அவற்றில் முக்கிய படங்களாய் என் புரிதலுக்கானவை:
பிரேவ் ஹார்ட், பேர்ல் ஹார்பர் படங்களின் திரைக்கதாசிரியர் ரேண்டல் வாலஸ்ஸின் “Secretariat"
கேன்ஸில் சிறந்த இயக்குநர் விருது பெற்ற ஜூலியன் ஸ்சென்பெலின் "Miral" - இதில் ப்ரைய்டா பிண்டோ ஸ்லம்டாக் மில்லினர் நாயகி நாயகியாக நடித்தது.
வேர்ல்ட் பனோரமா குழுவில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படமான “Udaan” உதான் - விக்ரமாதித்ய மோத்வனெ இயக்கத்திலும், மற்றும் அனுராக் கேஸ்யாப்பின் திரைக்கதையிலும் வந்த படம்.
1945 க்கும் 1962 க்கும் இடைப்பட்ட காலங்களில் அல்ஜீரியாவில் நடந்த கொடும்கொலைகளில் தப்பித்து பிரான்ஸில் தஞ்சம் புகுந்த மூன்று சகோதரர்களின் கதையமைப்பைக் கொண்ட ''Outside the Law"
மற்றும் கென்ய கிராமத்தின் 84 வயது விவசாயியின் முதியோர் கல்வி ஆசை பற்றிய "The First Grader" படங்கள்.
இந்த விழாவில் ராம்கோபால் வர்மாவின் ரக்த சரித்ராவும் சிறப்புத் திரையிடலாக திரையிடப்பட்டது.விழாவில் ஒருநாள் பேமிலி டேயாக அறிவித்து இலவசமாய் இரண்டு நல்லபடங்களையும் அழகான திறந்தவெளி அரங்கில் காண்பித்தார்கள் என்பது நண்பரின் மூலம் கடைசியாக வந்த தகவல்.மீரா நாயர்,ப்ரைய்டா பின்டோ,சல்மா ஹெயக் மற்றும் மல்லிகா ஷெராவத் ஆகியோரும் கலந்து கொண்டார்களாம்.இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் நான் தவறவிட்டதாய் சொன்ன வாய்ப்பு.அடுத்த வருடத்தில் வாய்ப்பு கிடைத்தால் தவறவிடக்கூடாது என்று எங்கோ எழுதின ஞாபகம்(இங்கே தான்.. வேற எங்கேயும் எழுதறதில்லை).தோஹா நண்பர்கள் கூட்டு சேரலாம்.அதுவரை என்ன பண்றது..இந்த படங்களை சில பல உபயங்களின் மூலம் முடிந்தால் பார்த்துவிட்டு பதிவிட வேண்டியது தான்..
நன்றி: DTFF - http://www.dohafilminstitute.com/
செந்தில்குமார்.

Thursday, 28 October 2010
மனுநீதி சோழனும் குஜராத்தும்
நாம் ஒரு கன்றுக்குட்டிக்காக தன் மகனையே கொல்லத்துணிந்த மனுநீதி சோழனைப் பற்றி படித்திருக்கிறோம்.அவரின் அரண்மனைக்கு வெளியே குறைதீர்ப்பு கவன ஈர்ப்பாக ஒரு பெரிய மணி கட்டப்பட்டு இருக்குமாம்,குறையை நேரடியாய் அரசனிடம் முறையிட ஏதுவாக இருக்க.இது இப்போதைய சூழலுக்கு,அரசு நிர்வாகத்திற்கு மிகப்பழமையான விஷயமாக இருக்கலாம்.ஆனால் இதே கருத்துருவைக் கொண்டு இன்று குஜராத் மாநிலம் பெரும் சாதனைகளைப் பெற்றிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
மக்களின் முறையீட்டுக்கு இலகுவாக அழைப்புமணியாக இன்று இணையத்தை ஏற்படுத்தித் தந்து அதன் மூலம் பொதுமக்களின் நேரடி குறைகளை ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே செவிசாய்த்து தீர்வுக்கு வழி செய்கிறார்.இதைத்தான் குஜராத்தில் 2003ஆம் ஆண்டில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் துயர் துடைக்கும் கவன ஈர்ப்பு ([State Wide Attention on Grievances with Application of Technology (SWAGAT)] என்னும் திட்டத்தின் மூலம் இன்று நல்ல நிர்வாகத்திறனை எட்டியிருக்கிறார்கள்.
மக்கள் தங்களின் துயரை இணையதளத்தில் பதிவு செய்வதும்,குறிப்பிட்ட கால அவகாசத்தில் அதற்கான பொறுப்பதிகாரியின் விளக்கங்களுடன் மாதாமாதம் நான்காம் வியாழக்கிழமைகளில் முதலமைச்சர் பொதுமக்களை தொலைத்தொடர் நேரடி கலந்துரையாடலில்(வீடியோ கான்பரென்ஸ்) தொடர்பு கொள்கிறார்.இதற்கு ஏதுவாய் எல்லா துறைகளின் அலுவலகங்களிலும்,மாவட்ட மற்றும் வட்டாட்சி அலுவலகங்களிலும் விரைவான broadband (அகலப்பட்டை-?) இணைப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.முதலமைச்சரின் நேரடித் தலையீட்டால் அரசதிகாரிகளும் முனைப்போடு இருக்கவேண்டியது அவசியமாகிறது.
மக்களின் குரல் அரசாங்கத்தை எட்ட இணையத்தின் உதவியுடன் மாநிலத்தின் முதல்வர் செவிசாய்க்கும் திட்டம் மனுநீதி சோழனின் மணியோசை தான்.இந்த திட்டம் தான் குஜராத் மாநிலம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற, ஐக்கிய நாடுகளின் பொது நல சேவை விருது வகையான ‘பொது நல சேவையில் பொறுப்புடனும், கவன ஈர்ப்புடனும் கூடிய தெளிவான முன்னேற்றம்’ என்னும் 2010-ற்கான விருதினை SWAGAT பெற வழிசெய்துள்ளது.இதுமட்டும் அல்லாமல் குஜராத் மாநிலம் சென்ற ஆண்டிற்க்கான பொதுநல சேவை விருதும் தரமான குடிநீர் வழங்கல் ம்ற்றும் கழிவுநீர் நிர்வாகப் பிரிவில் பெற்றுள்ளது.
இதுபோன்ற உண்மைகள் நம்மையும் நம் மீடியாக்களையும் பெரிதாய் ஈர்ப்பதேயில்லை.இது மற்ற மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாய் எனக்கு தோன்றுகிறது.மோடி பற்றி குறைகளைப் பேசியே பழக்கப்பட்டுப்போன மீடியா இதிலெல்லாம் ஆர்வம் காட்டுவதே இல்லை.சில சமயங்களில் சத்தம் போடாமலும்,பலசமயம் கூப்பாடுபோட்டும் எல்லா வகை முன்னேற்றங்களையும் தன்மாநிலத்திற்கே கொண்டு செல்வதில் மோடி குறியாகவே இருக்கிறார்.
குஜராத்தோடு ஒப்பிடுகையில் நம் தமிழகம் எங்கே இருக்கிறது?எப்போது நம் அரசு எந்திரம் விழித்துக்கொள்ளப்போகிறது?எப்போது நம் முதல்வர்கள் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ளப் போகிறார்கள்? எப்போது நமீதா,குஷ்பு கலந்துகொள்ளும் விழாக்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்காமல் நல்ல திட்டங்களை கொண்டுவரப்போகிறார்கள் என்ற பலகேள்விகள் வந்து மனத்தில் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மனுநீதி சோழனும் மோடியும் என்று முதலில் தலைப்பிட்டு ஏனோ மாற்றிவிட்டேன்...
கொசுறு நற்செய்தி:அடுத்த பத்தாண்டுகளில் பெரும்வளர்ச்சியை எட்டப்போகும் மூன்று இந்தியநகரங்களில் சென்னையும் (மற்ற இருநகரங்கள் அகமதாபாத் மற்றும் பெங்களூரு) ஒன்றாக அமெரிக்க இதழ் Forbes நடத்திய ஆய்வில் தெரிவிக்கிறது.இந்த ஆண்டில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ள நகரமாய் சென்னைக்கு இந்த மதிப்பு கிடைத்திருக்கிறது.பெருமையாய் இருக்கிறது.

Subscribe to:
Posts (Atom)