Monday 25 October 2010

மன்மதன் அம்பு -- சில எதிர்பார்ப்புகள்

எந்திர பரபரப்பு ஒரு வழியாக அடங்கி முடிகின்ற நேரத்தில் அடுத்த கட்டத்திற்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்ல முயல்கிற முக்கியமானவர்களில் ஒருவரான கமலின் அடுத்த படம் மன்மதன் அம்பு வண்டி கட்டிக்கிட்டு இருக்கிறது.அடுத்த பரபரப்புக்கு தீனி போட ஆளும் ரெடி.வேற யாரு,கலாநிதி மாறனுக்கு போட்டி ஆளு உதயநிதி ஸ்டாலின் தான்.ஒரு கலைஞரின் கிளைக்குடும்பங்கள் ஒட்டுமொத்த தமிழ்சினிமாவையும் ஒரேடியா குத்தகைக்கு எடுத்துட்ட மாதிரி தெரியுது.கமல்,ரஜினி படங்களுக்கே இந்த நிலைன்னா அடித்த வரிசையில் உள்ளவர்கள் நிலை என்னாவோ.?


கலைஞர் டிவியில இதுவரை சன் டிவி கணக்கா ஆடம்பர ஆர்பாட்டம் இல்லாத மாதிரி தெரிந்தாலும் எந்திரன் கடுப்புல கைவரிசை காட்டுவாங்க.கலைஞர் டிவியில் வயசாயிப்போன பிரியதர்சினியின் மொக்கையான கேள்விகளுடன் ரவிக்குமாரும்,உதயநிதியும்,த்ரிஷா,மாதவனும் சில வளர்ந்த மற்றும் வளரும் இயக்குனர்களும் கமலுடன் கலந்துரையாடுவார்கள் என கட்டாயம் எதிர்பார்க்கலாம்.பாலாபிஷேகம் எல்லாம் காட்டமாட்டாங்கன்னு நம்புவோமாக..

உலகமெங்கும் 1000 தியேட்டர்களிலும்,தமிழ்,தெலுங்கு,ஹிந்தியிலும், வெளியிடப்போறதா பரபரப்பா பேசிக்கிறாங்க.சிங்கப்பூரிலோ,லண்டனிலோ அல்லது மானாட மயிலாட நடத்திய அபுதாபியிலோ(எவ்ளோ நாள் தான் துபாயே சொல்றது.,) பிரமாண்டமாய் இசை வெளியீட்டு விழா நடக்கும்.முக்கியமா அதுக்கு பயணப்பட்டதை கலைஞர் டிவியில போட்டு காசாக்க முனைப்பா இருப்பாங்க.DSP - தேவிஸ்ரீ பிரசாத் ஒரே ஆட்டம் பாட்டமாய் முக்கியமாய் ஒரு நடிகையுடன் ஆட்டம் போட்டுட்டு அதகளம் பண்ணுவார்.மானாட மயிலாட கோஷ்டியினர் இசை நிகழ்ச்சியில் கமலின் பாடல்களுக்கு ஆட்டம் போடுவார்கள்.

சௌந்தர்யா,ஐஸ்வர்யா கணக்கா ஷ்ருதியும்,அக்ஸ்ராவும்,கவுதமியும் கமலுடன் பயணப்பட்டு இருப்பார்கள்.கலைஞர் கருணாநிதி சென்னையில் இருந்தபடியே ரிமோட் கண்ட்ரோல் மூலம் இசைவெளியிடுவார்.ஒரு வாழ்த்துச்செய்தியும் அனுப்புவார்,அதை உதயநிதி பெருமையாய் வாசித்துக் காட்டுவார்.கமலின் அடுத்தபடத்தில் பங்கேற்கப் போகிறவர்கள் கட்டாயம் கலந்து கொள்வார்கள்.


படமெடுத்த சொகுசுக்கப்பலில் நடந்த சுவாரஸ்ய நடப்புகளை படம் காட்டியும்,விளக்கியும் சொல்வார்கள்.கமலின் ஆஸ்தான நடிகர்கள் படத்தில் முக்கிய பங்களிப்பார்கள்.எல்லா தமிழக நிதிகளைப் போல உதயநிதியும்  நம் நிதியை காலிபண்ண முடிந்தவரை பிரயதனப்படுவார் பல்வேறு விளம்பர யுக்திகள் மூலம்.கோவைசரளா போல இதில் சங்கீதாவிற்கு கமலுக்கு ஜோடியாகிற வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.

எல்லா சேனல்களும் பதிவர்களும் ரவுண்டு கட்டுவார்கள்.சாரு வழக்கம் போல கமலுக்கு இதெல்லாம் தேவையா என்பார்.ஞானி பாராட்டக்கூடும் அவர் மகனும் இதில் ஒரு பங்கேற்பாளி(ஒளிப்பதிவாளர்) என்பதால்.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இதென்ன பத்துவருட கனவுப்படமோ அல்லது தமிழ் சினிமாவின் மைல்கல்லோ ஒன்னும் இல்லையே நாம்  பெரிதாய் எதிர்பார்க்க..வழக்கமான கமலின் ஹாஸ்யத்தைத் தான்.நகைச்சுவை கமலுக்கும் ரவிக்குமாருக்கும் நன்றாகவே வரும் என்பதால் நம்மை சிரிக்க வைத்தால் சரி.

5 comments:

erodethangadurai said...

நல்ல கருத்துகள் . வாழ்த்துக்கள்.

தணிகை செந்தில் said...

நன்றி தங்கதுரை!!

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு முதன்முறையாக வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

Unknown said...

Another Mumbai Express

கானகம் said...

உம், என்னத்தைச் சொல்ல?

கமலும் நாலுகாசு பார்க்கட்டும்.. சும்மா, சும்மா ரஜினி படமே ஓடிக்கிட்டிருந்தா ரஜினிக்கே போரடிக்கும். ரவிக்குமார் இயக்கம் என்பதால் கமல் தப்பித்துவிடுவார்.