Thursday 28 October 2010

மனுநீதி சோழனும் குஜராத்தும்

நாம் ஒரு கன்றுக்குட்டிக்காக தன் மகனையே கொல்லத்துணிந்த மனுநீதி சோழனைப் பற்றி படித்திருக்கிறோம்.அவரின் அரண்மனைக்கு வெளியே குறைதீர்ப்பு கவன ஈர்ப்பாக ஒரு பெரிய மணி கட்டப்பட்டு இருக்குமாம்,குறையை நேரடியாய் அரசனிடம் முறையிட ஏதுவாக இருக்க.இது இப்போதைய சூழலுக்கு,அரசு நிர்வாகத்திற்கு  மிகப்பழமையான விஷயமாக இருக்கலாம்.ஆனால் இதே கருத்துருவைக் கொண்டு இன்று குஜராத் மாநிலம் பெரும் சாதனைகளைப் பெற்றிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

மக்களின் முறையீட்டுக்கு இலகுவாக அழைப்புமணியாக இன்று இணையத்தை ஏற்படுத்தித் தந்து அதன் மூலம் பொதுமக்களின் நேரடி குறைகளை ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே செவிசாய்த்து தீர்வுக்கு வழி செய்கிறார்.இதைத்தான் குஜராத்தில் 2003ஆம் ஆண்டில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் துயர் துடைக்கும் கவன ஈர்ப்பு ([State Wide Attention on Grievances with Application of Technology (SWAGAT)] என்னும் திட்டத்தின் மூலம் இன்று நல்ல நிர்வாகத்திறனை எட்டியிருக்கிறார்கள்.

மக்கள் தங்களின் துயரை இணையதளத்தில் பதிவு செய்வதும்,குறிப்பிட்ட கால அவகாசத்தில் அதற்கான பொறுப்பதிகாரியின் விளக்கங்களுடன் மாதாமாதம் நான்காம் வியாழக்கிழமைகளில் முதலமைச்சர் பொதுமக்களை  தொலைத்தொடர் நேரடி  கலந்துரையாடலில்(வீடியோ கான்பரென்ஸ்)  தொடர்பு கொள்கிறார்.இதற்கு ஏதுவாய் எல்லா துறைகளின் அலுவலகங்களிலும்,மாவட்ட மற்றும் வட்டாட்சி அலுவலகங்களிலும் விரைவான broadband (அகலப்பட்டை-?) இணைப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.முதலமைச்சரின் நேரடித் தலையீட்டால் அரசதிகாரிகளும் முனைப்போடு இருக்கவேண்டியது அவசியமாகிறது.

மக்களின் குரல் அரசாங்கத்தை எட்ட இணையத்தின் உதவியுடன் மாநிலத்தின் முதல்வர் செவிசாய்க்கும் திட்டம் மனுநீதி சோழனின் மணியோசை தான்.இந்த திட்டம் தான் குஜராத் மாநிலம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற, ஐக்கிய நாடுகளின் பொது நல சேவை விருது வகையான ‘பொது நல சேவையில் பொறுப்புடனும், கவன ஈர்ப்புடனும் கூடிய தெளிவான முன்னேற்றம்’ என்னும் 2010-ற்கான விருதினை SWAGAT பெற வழிசெய்துள்ளது.இதுமட்டும் அல்லாமல் குஜராத் மாநிலம்   சென்ற ஆண்டிற்க்கான பொதுநல சேவை விருதும் தரமான குடிநீர் வழங்கல் ம்ற்றும் கழிவுநீர் நிர்வாகப் பிரிவில் பெற்றுள்ளது.

இதுபோன்ற உண்மைகள் நம்மையும் நம் மீடியாக்களையும் பெரிதாய் ஈர்ப்பதேயில்லை.இது மற்ற மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாய் எனக்கு தோன்றுகிறது.மோடி பற்றி குறைகளைப் பேசியே பழக்கப்பட்டுப்போன மீடியா இதிலெல்லாம் ஆர்வம் காட்டுவதே இல்லை.சில சமயங்களில் சத்தம் போடாமலும்,பலசமயம் கூப்பாடுபோட்டும் எல்லா வகை முன்னேற்றங்களையும் தன்மாநிலத்திற்கே கொண்டு செல்வதில் மோடி குறியாகவே இருக்கிறார்.


குஜராத்தோடு ஒப்பிடுகையில் நம் தமிழகம் எங்கே இருக்கிறது?எப்போது நம் அரசு எந்திரம் விழித்துக்கொள்ளப்போகிறது?எப்போது நம் முதல்வர்கள் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ளப் போகிறார்கள்? எப்போது நமீதா,குஷ்பு கலந்துகொள்ளும் விழாக்களுக்கெல்லாம் நேரம் ஒதுக்காமல் நல்ல திட்டங்களை கொண்டுவரப்போகிறார்கள் என்ற பலகேள்விகள் வந்து மனத்தில் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

மனுநீதி சோழனும் மோடியும் என்று முதலில் தலைப்பிட்டு ஏனோ மாற்றிவிட்டேன்...

கொசுறு நற்செய்தி:அடுத்த பத்தாண்டுகளில் பெரும்வளர்ச்சியை எட்டப்போகும் மூன்று இந்தியநகரங்களில் சென்னையும் (மற்ற இருநகரங்கள் அகமதாபாத் மற்றும் பெங்களூரு) ஒன்றாக அமெரிக்க இதழ் Forbes நடத்திய ஆய்வில் தெரிவிக்கிறது.இந்த ஆண்டில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ள நகரமாய் சென்னைக்கு இந்த மதிப்பு கிடைத்திருக்கிறது.பெருமையாய் இருக்கிறது.

4 comments:

சர்பத் said...

//ஒரு கன்றுக்குட்டிக்காக தன் மகனையே கொல்லத்துணிந்த மனுநீதி சோழனைப்//

தன் வாரிசுகளுக்காக நாட்டையே பங்கு போடுகிறார் இங்கு ஒருவர்!

வாழ்க பணநாயகம்!

யஷ்வந்த் said...

பாமர மக்களை இலவச தொலைக்காட்சி பெட்டி,1 ரூ அரிசி போன்ற திட்டங்களால் வசியம் செய்து வைத்திருக்கிறார்கள். அரசியல் பலத்தால் தமிழகத்தில் எல்லா துறைகளிலும் கால் பதித்து ஏகாதிபத்தியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதிலெல்லாம் நாட்டம் இருக்கும் பொழுது மாநிலம் வளம் பெரும் திட்டங்களை பற்றி யாருக்கு என்ன கவலை?!!
இவர்கள் குட்ட குட்ட நம் மக்கள் குனியவில்லை. நம் மக்களை குனியவைத்து குட்டுகிறார்கள்.

கணேசமூர்த்தி said...

செந்தில்
மிகவும் அருமையான, + வான பதிவு.
ஒரு வேளை இதையெல்லாம் ஒரு பிராயசித்தமாக செய்கிறாரோ மோடி?
சென்னையை குறிக்கோளாக வைத்து மற்ற பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்கள் மிகவும் வேகமாகவும், சென்னையை விடவும் பல விஷயத்தில் முன்னேறிவிட்டது.ஆனாலும் நம்ம தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் விதமே வேற... செல்லிடப்பேசியும், தொலைக்காட்சியும், இணையமும் நல்ல உதாரணம்

கானகம் said...

செந்தில் அருமையான பதிவு. குஜராத் மட்டுமே இந்தியாவில் இன்றைய தேதியில் மக்கள் நலன்சார் அரசு நடக்கும் மாநிலம். குஜராத்தின் இந்த சாதனைகளெல்லாம் மோடியை வில்லனாய்ச் சித்தரிக்கும் ஊடகங்களுக்கு எட்டிக்காய். எனவே இவையெல்லாம் வெளியே வராது.

larose,

//ஒரு வேளை இதையெல்லாம் ஒரு பிராயசித்தமாக செய்கிறாரோ மோடி?//

இதற்கு என்ன அர்த்தம்? மோடி என்ன பாவம் செய்தார்? பிராயச் சித்தம் செய்வதற்கு? போலி மதச்சார்பின்மைவாதிகள்தான் இந்தியாவின் உண்மையான எதிரிகள். உண்மைகளை மறைத்து கோயபல்ஸ் பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் குஜராத் மக்களும், பிஹாரிகளும் மன் அள்ளிப்போட்டு மாமாங்கமாகிவிட்டது. பலவிஷயங்களை படித்து அறிந்த நீங்களுமா மீடியாவின் புரட்டுச் செய்திகளை நம்பி மோடியைத் தூற்றுவது? இந்தியாவின் நம்பிக்கை அரசியல்வாதி மோடி மட்டுமே.. மற்றவர்களெல்லாம் சாக்கடைப் புழுக்கள். அதைத்தான் நாளொருமேனியும், பொழுதொரு வன்னமுமாய் வந்துகொண்டிருக்கும் அலைபேசி ஏல ஊழல்கள் சொல்கின்றன.

SIT clears Gujarat CM Narendra Modi of wilfully allowing post-Godhra riots

http://indiatoday.intoday.in/site/Story/121947/top-stories/sit-clears-gujarat-cm-narendra-modi-of-wilfully-allowing-postgodhra-riots.html

மேற்கண்ட உரல்கள் உங்கள் தகவலுக்காக லாரோஸ்..காங்கிரஸ் எப்படியாவது மோடியைச் சிக்கவைத்துவிட முயன்று தோற்ற கதைதான் மேலேயிருப்பது. மத்திய அரசை நடத்துவது காங்கிரஸ்தான் என்பதும், அதனது அசுர பலமும் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நம்புகிறேன். அவர்களாலேயே சிக்கவைக்க முடியவில்லை.